அன்புள்ள விவசாய நண்பர்களே,
வணக்கம்.
கோபி செல்வம் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். நெல் அறுவடை செய்ய நவீன இயந்திரம் வாடகைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,
கோபி செல்வம் ,
கோபிசெட்டிபாளையம்-
(1)9842715325
(2)9487151983
சூரிய ஆற்றல்! இன்றைய தேவைக்கு பயன்படுத்துங்க!
வருங்கால மனித வாழ்க்கை முழுக்க முழுக்க எரிசக்தியை நம்பியே இருக்கப்போகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை, தற்போது நடைமுறையில் உலக மக்களால் பயன்படுத்தப்படுகின்ற பெட்ரோலியம். நிலக்கரி. இயற்கை எரி வாயு முதலியவை இன்னும் சில காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். அதன்பின் அவை காலியாகிவிடும். என்றைக்குமே காலியாகாத வற்றாத சக்தியை தேட வேண்டிய கட்டாயத்தில் மனித குலம் இன்றைக்கு உள்ளது. அந்த தேடலில் மிக முக்கியமான ஆற்றலாக சூரிய ஆற்றல் சற்றே பிரபலமடைந்து வருகிறது.
இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.
சோலார் பவருக்கு அடுத்தபடியாக இருப்பது காற்றாலை மின்சார உற்பத்திதான்.வீடுகளின் மொட்டை மாடியிலேயே சிறிய டவர்கள் மூலம் ஒரு நாளில் 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்பது காற்றாலையில் சாதகமான விஷயம்.
சாதாரணமாக காற்றில் இலைகள் அசையும் வேகத்தில் காற்று வீசினாலே இந்த மின் இயற்றி தானாகச் சுற்றத் தொடங்கிவிடும். அதாவது, காற்றின் வேகம் மிதமாக இருந்தாலே போதும். (நிமிடத்திற்கு 3.1 மீட்டர்) அதேபோல இந்த மின் இயற்றியை இயக்குவதற்கு என்று தனியாக மின்சாரம் செலவிடத் தேவையில்லை. காற்றின் வேகத்திற்கு ஏற்ப தானாக இயங்கி தானாகவே நிற்கும் ஆற்றல் கொண்டது. சூரிய சக்தி, காற்று சக்தி இரண்டும் சேர்ந்த கலவை என்பதால் எந்த பருவ நிலையிலும் நமக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும்''
நிரந்தர ஆற்றல் மூலமாக நம்பிக்கையுடன் கையாள முடியும்.
ஒரு முறை அமைப்பதற்கு மட்டுமே செலவாகுமேயன்றி உற்பத்தி செலவு சிறிதும் இல்லை.
இலவசமாகவே வெப்பமாகவோ. மின்சாரமாகவோ பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எந்தவித கழிவுகளையும் உருவாக்காத பசுமை ஆற்றல். எனவே சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது,
இதையெல்லாம் விட முக்கியமான விசயம் சூரிய சக்தி மின்சக்தி தகடுகளின் (Photovoltaic Cells) ஆயுட்காலம் 25 வருடங்களுக்கும் மேல்.
சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலை இரண்டு வழிகளில் வெற்றிகரமாக பயன்படுத்தலாம், ஒன்று மின் ஆற்றலாக மாற்றி இயந்திரங்கள மற்றும் மின் விளக்குகளை இயக்குவது, இரண்டாவது வெப்ப ஆற்றலாக ஹீட்டர். குக்கர் முதலிய உபகரணங்களில் நீரை சூடாக்கி உணவை வேகவைக்க பயன்படுத்துவது, இதில் மின் ஆற்றலாக மாற்றுவதே மிகச் சிறந்த வழி, இதுதான் வரும் காலங்களில் மிகவும் பிரபலமடையும்
(1) சூரியசக்தி தகடுகள் (Solar Photovoltaic Cells)
இவை சூரிய ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றக் கூடியவை.
(2) மொனோ க்ரிஸ்டலின் தகடுகள் (Mono Crystalline Panels)செமி கண்டக்டர் (Semi Conductor Ex-Silicon) என்று சொல்லப்படும் சிலிகனை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.இவை நேர் (DC) மின்சாரத்தை மட்டுமே வழங்குபவை.(3) பாலி க்ரிஸ்டலின் தகடுகள் ( Poly Crystalline Panels)
இதுதான் இன்று எல்லா இடங்களிலும் பெரும்பாலும்
பயன்படுத்தப்படுகின்ற சோலார் பேனல்கள்.இதுவும் சிலிகனை அடிப்படையாகக்
கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. இவை 3 வாட் முதல் இன்று 245 வாட் வரை
ஒரே பேனல்களாக தயாரிக்கப்படுகிறது. இதை ஒரு கிரிட்(GRIT) கொண்டு இணைத்து
மிக அதிக பட்ச மின் உற்பத்தியாக 600 மெகாவாட் வரை குஜராத்தில் சாதித்து
காட்டி விட்டனர். எனவே சூரிய சக்தியிலிருந்து மின் உற்பத்தி எவ்வளவு
வேண்டுமானாலும் இத்தகைய சோலார் பேனல்களைக் கொண்டு உற்பத்தி செய்ய முடியும்.
இதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் தைரியமாக முதலீடு
செய்து மின் உற்பத்தி செய்ய முடியும். இதை சரியான மின் பகிர்மான வசதிகளை
அமைத்து அனைவருக்கும் விநியோகிக்கவும் முடியும், ஒவ்வொரு வீடுகளிலும்
தேவைக்கேற்ப சூரிய மின்உற்பத்தி தகடுகளை நிறுவி அவரவர்களே உற்பத்தி செய்து
கொண்டால் மின் ஆற்றல் தட்டுப்பாடு என்றுமே வராது.
(4)CIGS சோலார் தகடுகள் ( CIGS Solar Panels)
சூரிய ஒளி மின் உற்பத்தியில் மிக முக்கியமான லேட்டஸ்ட்
(2012) தகவல் இந்த CIGS பேணல் கண்டுபிடிப்பே. இவை சாதாரண பாலி
கிரிஸ்டலின் தகடுகளை விட 17 % வரை அதிக மின் உற்பத்தியை அதே ஒளியில் தர
கூடியது. எனவே காலை 7 மணியிலிருந்தே மின் உற்பத்தி தொடங்கி மாலை 5 மணி வரை
தொடர்ந்து குறைந்த சூரிய ஒளி செறிவிலும் மின்சாரம் உற்பத்தி ஆவது இதன்
சிறப்பு. இவை காப்பர், இன்டியம், கேலிய்ம், (டை) செலனைடு தனிமங்களை கொண்டு
தகுந்த உற்பத்தி முறைகளால் உருவாக்கபடுகிறது. இவை பாலி கிறிஸ்டலின்
பேனல்களை விட 20% விலை அதிகம் என்றாலும் 25 வருடம் மின் உற்பத்தி திறனில்
வெற்றிகரமான பேனலாக இருக்க போகிறது. இன்றைய நிலையில் அனைத்து வீடுகளுக்கும்
குறைந்த திறனுள்ள, அதாவது 60 வாட் முதல் 1000 வாட் வரை இந்த வகை
பேனல்களே மிகவும் சிறந்தவை என்பது எனது கருத்து. இதை தயாரிப்பது சற்று
சிரமமான விஷயம். ஏனென்றால் இதிலுள்ள அணைத்து தனிமங்களும் அதிக கடின தன்மை
கொண்டவை. இதிலுள்ள செலினியம் வெளிச்சத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால்
குறைந்த ஒளியிலும் சிறப்பாக செயல்படுகிறது.
நிரந்தரமான மின் உற்பத்திக்கு பேருதவியாக இருக்கப் போவது சூரிய ஒளி மின்சாரமே அனைவரும்
வாங்கும் எளிய விலையில் என்னால் கொடுக்க முடியும் என்று உறுதியாக
கூறுகிறேன். வெறும் 5 ஆயிரத்தில் தொடங்கி (10 Watt). 1.50,000- ரூபாய்
(600 Watt) வரை அனைத்து தேவைகளுக்கும் அவரவர் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ள
முடியும்.அந்தந்த வீடுகளில்
கிடைக்கும் DC சூரிய ஒளி மின்சக்தியை அங்கேயே பயன்படுத்துவதால் ஆற்றல்
இழப்பு மிக மிக குறைவே. ஆகவே சூரிய ஒளி மின் அமைப்புகளில் DC
மின்சாரத்தில் இயங்கும் மின் விளக்குகள் (LED Bulbs) . மின் விசிறிகள் (DC
FAN) மற்றும DC ஏர் கூலர்கள் (AIR COOLER WITH DC MOTOR) முதலியவறறை
பயன்படுத்துவதே புத்திசாலித்தனமேயன்றி ஏற்கனவே உங்களிடம் இருக்கும் AC
மின்சாரத்தில் இயங்கும் விளக்குகள். மின் விசிறிகளை பயன்படுத்தினால்
தேவையற்ற ஆற்றல் வீணடிக்கப்படுவதோடு. அதற்கான மின் உற்பத்தி சாதனங்களுக்கு
அதிகமான முதலீடும் தேவைப்படும். வணிக ரீதியாக DC யில் இயங்கும் மின்
விசிறிகள் பல மாடல்களில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன, மிக உயர்ந்த
தரத்தில் LED விளக்குகளும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு
இந்தியாவில் முழு உருவம் கொடுக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.




































