Thursday, 25 September 2014

ஆழ்துளை கிணற்றுக்கு எந்த மோட்டார்? -கோபி செல்வம்.

அன்புடையீர் வணக்கம்.
               கோபி செல்வம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
நெல் அறுவடை செய்ய நவீன இயந்திரம் வாடகைக்கு தொடர்பு கொள்ள ,கோபி செல்வம்
 (1)9842715325 
(2) 9487151983
கோபிசெட்டிபாளையம்

ஆழ்துளை கிணற்றுக்கு எந்த வகை மோட்டார் சிறந்தது?

        பொதுவாக வீடுகளின் நீர்தேவை குறைந்த அளவே 2000 லிட்டர் முதல்  5000 லிட்டர் வரை  இருப்பதால் வீட்டு ஒரு முனை  மின்சாரத்தில் (Single Phase) இயங்கும் மோட்டார்களே போதுமானது. இவை தற்போது மூன்று முக்கிய வடிவமைப்பில் கிடைகின்றன. அவை,
  1. ஜெட் பம்புகள் ( JET PUMPS)
  2. கம்ப்ரசர்கள்  (COMPRESSORS)
  3. நீர் மூழ்கி மோட்டார்கள்   ( SUBMERSIBLE PUMPSETS)      இவற்றில் நீர்மூழ்கி மோட்டார்களே சிறந்தது.
 

நீர்மூழ்கி போர்வெல் பம்புகள் : (Bore well Submersible Pump sets)

                  இவை நவீன மின்- இயந்திரவியல்( Electro-Mechanical) தயாரிப்புகள். அதாவது குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி மிக அதிக நீரை இறைப்பதோடு எந்த சப்தமும் இல்லாமல் அமைதியாக இயங்குவது மற்றும் மிக அதிக ஆழம் வரை 1000 அடிக்கும் கீழிருந்து நடைமுறையில்  நீரை இறைக்கும் ஒரே தொழில்நுட்ப பம்புகள் இவை மட்டுமே. இவை 1990 க்கு பின் சற்று பிரபலமாகி இன்று அணைத்து இடங்களிலும் திறம்பட செயலாற்றி வருகின்றன.

தேர்ந்தெடுப்பது எப்படி ?

                 இவற்றை தேர்ந்தேடுப்பதில்தான் நிறையபேர் தவறு செய்கின்றனர். 250 அடியில் நீர் கிடைக்கும் போர்வெல்லில் 500 அடி ஆழம் வரை  வேலை செய்யும் பம்புகளை பொருத்தி விடுகின்றனர். நடைமுறையில் இது விற்பனையாளர்கள் செய்யும் தவறேயன்றி வாங்குபவர் தவறல்ல . இதனால் பாதியளவு நீரை மட்டுமே பெற முடியும். மின்சாரமும்  விரயம், அதிக  தொடக்க முதலீடும் தேவையற்ற விரயம். யாருக்கும் இது சம்பந்தமான தொழில்நுட்ப அறிவு இன்னும் மேம்படவில்லை. சரியான மோட்டாரை தேவையான ஆழத்தில் நிறுத்தி நீரை இறைக்கும் போது இரு மடங்கு மின்சாரம், நேரம், மிச்சமாகும்.
  * போர்வெல்லின் மொத்த ஆழம்?   
  *  எத்தனை அடியில் தண்ணீர் நன்றாக வந்தது?   
  *  நீர் எத்தனை அடி வரை மேலே வந்து நிற்கிறது?      
  *ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் நீர் தேவை?   
  *அடுக்குமாடி குடியிருப்பென்றால் அது எத்தனை மாடி?   
  *கிடைக்கும்  மின்சாரம் சிங்கிள்  பேஸா    அல்லது    திரி பேஸா? ( Single or Three  phase current)  

              போன்ற  தகவல்களை தெரிந்து  கொண்டு அதற்கேற்ற  மிகச் சரியான மோட்டாரை தேர்வு செய்யவேண்டும் .

                                   சமீபத்தில் நவீன தொழில்நுட்பத்தில்  ஒரு ஹச். பி. (1 HP) மோட்டார் ஒன்றை நான் வடிவமைத்துள்ளேன். அது 200 அடி உயரம் வரை வேலை செய்வதோடு நிமிடத்திற்கு 100 லிட்டர் நீரை இறைத்து விடும். அதே போர்வெல்லில் தவறாக 1.5 HP யில் 500 அடி வரை வேலை செய்யும் மோட்டார்  பொருத்தி 350 அடிக்கு கீழ்  மோட்டார் இருந்தாலும்  நிமிடத்திற்கு வெறும் 45 லிட்டர் நீர் மட்டுமே கிடைக்கும். இந்த மோட்டார்  விலையும் இரண்டு  மடங்கு அதிகம் . அதிக விலை கொடுத்து மோட்டார் வாங்கி குறைந்த நீரை இறைப்பது எந்த விதத்தில் புத்திசாலித்தனம்? வீடுகளுக்கான போர்வெல் மோட்டார்கள் ஒவ்வொரு குதிரைத் திறனிலும் 120-க்கும் அதிகமான மாடல்கள் உள்ளதால்  தேர்வு செய்யும் போது இந்த துறையில் தேர்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற வேண்டியது மிகவும் அவசியம்.

சப்மர்சிபில் மோட்டார் அமைக்கும் விதம் :-

           சரியான ஆழம் வேலை செய்யும் மோட்டாரை தேர்வு செய்து U PVC பைப் 
சரியான கிரேடு ( A,B,C Grades ) வலுவுள்ளதை வாங்கி தகுதியான ஆட்களை கொண்டு நிறுவ வேண்டும். மிக முக்கியமாக  காற்று வால்வையும், NRV எனப்படும் ஒரு வழி வால்வுகளையும் சரியான இடத்தில் பொறுத்த வேண்டும்.இல்லையென்றால் மோட்டார் ஓடி நிற்கும்போது நீர் திரும்ப வந்து மோட்டார் பம்பை  ரிவர்ஸில் சுழற்றுவதால் த்ரஸ்ட் பேரிங் (Thrust Bearing) பழுதடைந்து மோட்டாரின் ஆயுள் குறைவதோடு தேவையில்லாத பராமரிப்பு செலவையும் கொடுத்து விடும்.

1000  அடி வரை  நீர்மூழ்கி மோட்டாரை  அமைத்து இயக்கலாமா  ?

        நிலத்தடி நீர் மட்டம்  சில இடங்களில் அதல பாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில்  1000 அடிக்கும் கீழே மோட்டாரை பொருத்தி தண்ணீரை இறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
             மோட்டார் திறனை பொறுத்த வரை 1200 அடி வரை நீரை இறைக்கும் மோட்டாரை கூட என்னால் உருவாக்கித்   தர  முடியும்.அதாவது 10 HP திறனில் 50 ஸ்டேஜில் வடிவமைத்தாலே அது 1200 அடி வரை வேலை செய்யும்.அது ஒரு விசயமேயில்லை.

                    கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
                       1000 அடி உயரம் செங்குத்தாக நிற்கும் குழாயில் வேகமாக மேல்நோக்கி சென்று கொண்டிருக்கும் நீர் ஒவ்வொரு முறையும்  திடீரென மோட்டார் நிற்கும் போது எந்த தடையுமின்றி புவி ஈர்ப்பு விசையினால்  கீழ்நோக்கி பாய்ந்து  உருவாக்கும்  நீர்ம அழுத்தம்  (Hydraulic sudden force or Water hammering) நீர்முழ்கி பம்பின்  மேல் பகுதியில் உள்ள இம்பெல்லர்( Impeller) மற்றும் சுழலும் தண்டின் (Center Shaft) மீது தாங்க முடியாத அடியை ( 60 to 200 kgf/cm2) கொடுப்பதால் இம்பெல்லர் உடைவதுடன் தண்டும் வளைந்து (Shaft bend) விடுகிறது.இதனால் அடிக்கடி மோட்டார் பழுது ஏற்படும். அதே நேரம் 1000 அடிக்கும் கீழுள்ள மோட்டாரை கழற்றி மாட்டுவதும் எளிதான வேலையல்ல.மோட்டாரின் விலையும் பராமரிப்புச் செலவுகளும்  மிக அதிகம்.அதே நேரம் சிறிய விட்டமுள்ள வயரில் (Submersible cable 2.5, 4 or 6 sq mm ) 1000 அடிக்கும் மேல் மின்சாரத்தை கொண்டு செல்லும் போது மின் இழப்பு (Voltage loss) அதிகமாவதால் அடிக்கடி காயில் சூடேறி வைண்டிங் பழுதடையும்.

            எனவே  அத்தியாவசியமான குடிநீர் தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும்   600 அடிக்கும் கீழே மோட்டாரை இறக்கி இயக்குவது அதிக பராமரிப்பு செலவுகளை கொடுப்பதோடு புவியியல் சமநிலையை பாதிக்கும்  நிலத்தடி நீரினை உறிஞ்சுவதால் மிக  மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும்.எனவே  முடிந்தளவு இதனை  தவிர்ப்பது நல்லது. இன்னொருபுறம் பார்த்தால்  நிலத்தடி நீர் மட்டத்தை காப்பாற்றி வருங்கால சந்ததியினரான உங்கள் பேரன்,பேத்திகளையாவது  நினைத்து அவர்கள் குடிப்பதற்கேனும் கொஞ்சம் நல்ல தண்ணீரை விட்டுச்செல்லும்  உன்னத முடிவாகவும் இது  இருக்கும்.

No comments:

Post a Comment